Friday, November 25, 2022

1- எஸ் வி.வெங்கட்ராமன்

             


 


எஸ். வி. வெங்கட்ராமன்

சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் அய்யம்பாளையத்தில் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் பிறந்தார்.

தனது 28ஆவது வயதில் சரஸ்வதி என்பவரை மணந்தார்.

நான்காவது வரை மட்டுமே படித்திருந்தவருக்கு சிறுவயது முதலே இசை ஞானம் இருந்தது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்து வந்த நாடகக் குழுவில் இணைந்து கொண்டு நாடகங்களில் நடித்த போது ஹார்மோனியம் கற்றுக் கொண்டார்.

பம்பாயில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது  விழுந்து கையை முறித்துக் கொண்டார். பின்..ஏவி மெய்யப்ப செட்டியார் மூலம்  "நந்தகுமார்" என்ற படத்திற்கு இசையமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்க அங்கிருந்து திரும்பினார்.

பின் தொடர்ந்து தாசில்தார்,வால்மீகி,மனோன்மணி,கண்ணகி,மீரா ((தமிழ்,ஹிந்தி),நாகபஞ்சமி,ஸ்ரீமுருகன்,மனோகரா(தமிழ்,தெலுங்கு,ஹிந்தி),இரும்புத்திரை,அறிவாளி போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.

மீரா படத்தில் கல்கியின் "காற்றினிலே வரும் கீதம்" பாடலும்.."கிரிதர கோபாலா" உட்பட பாபனாசம் சிவன் எழுதியுள்ள எஞ்சியுள்ள அனைத்துப் பாடல்களும் இன்றும் நமக்கு  தேன் சிந்தும் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி,எம் ஜி ஆர்., ஜெயலலிதா,என் டி ராமாராவ் என அனைவருடனும் இவர் பணிபுரிந்துள்ளார்.

எம் எஸ் விஸ்வநாதன்,டி கே ராமமூர்த்தி,ஆகியோர் இவருடன் இவர் குழுவில் பணிபுரிந்துள்ளனர்.

எம் எஸ் சுப்புலக்ஷ்மி தவிர..பி யூ சின்னப்பா,ஜி என் பாலசுப்ரமணியம்,தண்டபாணி தேசிகர்,எம் எல் வசந்தகுமாரி,டி எம் சௌந்தரராஜன் ஆகியோர் இவர் இசையில் பாடியுள்ளனர்.

நாராயணீயத்திற்கு இசையமைத்துள்ளார்.

குருவாயூர் சுப்ரபாதம்(திருச்சூர் ராமசந்திரன்,பாபநாசம் சிவன் குரல்கள்) இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை, மனோகரா,அறிவாளி  படப்பாடல்கள் இன்றும் நம் மனதில் நிற்பவை.

பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில்..திருச்சி லோகநாதன் பாடிய.."புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே" நம் நினைவைவிட்டு அகலா பாடல்.

இவர் இசையமைப்பில் வந்துள்ள தமிழ்த் திரைப்படங்கள் 

நந்தகுமா (1938)

பூகைலாஸ் (1940)

சகுந்தலை (1940)

மணிமாலை (1941)

கண்ணகி (1942)

குபேர குசேலா (1943)

ஹரிசந்திரா(1944)

மகாமாயா (1944)

மீரா (1945)

பரஞ்சோதி (1945)

ஸ்ரீமுருகன் (1946)

வால்மீகி (1946)

மீரா (ஹிந்தி 1947)

தியாகி (1947)

மகாத்மா உதங்கர் (1947)

ஞானசௌந்தரி (1948)

கோகுலதாசி (1948)

திருமழிசை ஆழ்வார் (1948)

கிருஷ்ணபக்தி (1949)

நவஜீவனம் (1949)

லைலாமஜ்னு (1950)

இதயகீதம் (1950)

பாரிஜாதம்(1950)

வன சுந்தரி (1951)

சௌதாமிணி (தெலுங்கு,தமிழ் 1951)

லாவண்யா (1951)

சிங்காரி (1951)

பணக்காரி (1953)

மனிதன் (1953)

கண்கள் (1953)

கற்கோட்டை (1954)

மனோஹரா(தமிழ்,தெலுங்கு,ஹிந்தி 1954)

மாமன் மகள் (1955)

கோடீஸ்வரன் (1955)

கண்ணின் மணிகள் (1956)

நன்னம்பிக்கை (1956)

ஒன்றே குலம் (1956)

பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)

இரும்புத்திரை (1960)

அக்பர் (1961)

மருத நாட்டு வீரன் (1961)

அறிவாளி (1963)

கண்ணன் கருணை (1971)

ஸ்ரீ கிருஷ்ண லீலை (1977)

ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் 1998 ஆம் ஆண்டு அமரர் ஆனார்.







No comments:

Post a Comment

37- ஆதித்யன்

 இயற் பெயர் டைட்டஸ்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் நாள் பிறந்தவர். இசையமைப்பளர்,பாடகர்,ஓவியர், சமையல் கலைஞர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். இவர் ...