எம். டி. பார்த்தசாரதி(பிறப்பு: செப்டம்பர் 21, 1910 - ஆகஸ்ட் 1963) கர்நாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர் எனும் பரிமாணங்களையும் கொண்டிருந்தவர் பார்த்தசாரதி
எம் டி பார்த்தசாரதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர்.தஞ்சாவூர் நால்வர் என அந்நாளில் புகழ் பெற்று விளங்கியவர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளை,சங்கீத கலாநிதி டி எஸ் சபேச ஐயர் ஆகியோர் அப்போது அங்கு ஆசிரியராக இருந்தனர்.
1930களின் ஆரம்பத்தில் பட்டம் பெற்று வெளியேறியதும் பார்த்தசாரதி சென்னை சென்றார்.தமிழ்த் திரைப்படங்கள் அப்போதுதான் பேசும் படங்களாய வெளிவரத் தொடங்கிய காலம்.பாடக்கூடிய இசை ஞானம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த காலம்.
புராணக்கதைகள்ளை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்தன.மேடை நடிகர்களும்,சங்கீத வித்வான்களும் திரைப்படங்களில் நடிக்க வந்தார்கள்.அதனால் பார்த்தசாரதிக்கும் வாய்ப்புகள் வந்தன.
சக்கு பாய்,ஸ்ரீனிவாச கல்யாணம்,கருட கர்வபங்கம்,சேது பந்தனம்,ராஜ பக்தி,ராஜ துரோகி ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் இசையமைப்பில் வந்த படங்கள்..
1) மதனகாமராஜன் (1941)
2) நந்தனார் 91942)
3)பக்த நாரதர் (1942)
4)அருந்ததி
5)தாசி அபரஞ்சி (1944)
6)கண்ணம்மா என் காதலி (1945)
7)துளசி ஜலந்தர் (1947)
(8)ஞான சௌந்தரி (1948)
9)சக்ரதாரி
10)சந்திரலேகா (1948) (ராஜேஸ்வர ராவுடன் இணைந்து)
11) அபூர்வ சகோதரர்கள் (1949)
12)லட்சுமி (1953)
13) நம் குழந்தை (1955)
14) ஔவையார் (1953)
தவிர்த்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த மங்கம்மா சபதம், போன்ற படங்கள் இவர் மேற்பார்வையில் இசையமைக்கப்பட்டன.
சந்திரலேகா படத்தில் டிரம்ஸ் நடனத்தின் போது இசையும், ஔவையார் படப்பாடல்களும் நம்மால் மறக்க முடியாதவை.
எம். டி. பார்த்தசாரதி திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நாடகங்களில் அவரது பங்களிப்பு பாராட்டு பெற்றது. பின்னர், திரைப்படத்துறையிலிருந்து முற்றாக விலகியபின், அனைத்திந்திய வானொலியின் பெங்களூர் நிலையத்திலும் பணியாற்றினார்
No comments:
Post a Comment