சுந்தரம் பாலசந்தர் என்ற எஸ் பாலசந்தர் தஞ்சாவூர் ராவ் சாஹேப்வைத்தியநாதன் பேரனும்,சுந்தரம் மகனும் ஆவார்.நன்னிலம் ஸ்ரீவாஞ்சிய கிராமம் பூர்வீகமாகும்.
1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் சென்னையில் பிறந்த இவர்,சென்னையில் சட்டப்படிப்பை படித்து முடித்தார்.
தமிழ்த்திரைப்பட்ங்களில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தியவர்.1954ல் இவர் இயக்கிய "அந்தநாள்"என்ற திரைப்படம்பாடல்காட்சிகள் இன்றி இன்றளவும் முன்னோடியாய் இருக்கும் படமாகும்.
தன் ஐந்தாவது வயதிலேயே கர்நாடக இசையில் நாட்டம் கொண்டவராய் இருந்த இவர் கஞ்சிரா பயின்றார்.பல கலைஞர்களுக்கு பக்க வாத்திய இசையில் பங்கு கொண்டார்.பிரபல இசைக்கலைஞர் ராஜம் இவர் சகோதரன் ஆவார்.
வீணை,தபேலா,மிருதங்கம்,ஆர்மோனியம்,புல் புல் தாரா,தில்ரூபா,சித்தார்,ஷெனாய் என அனைத்து இசைகருவிகளையும் ஆசான் இல்லாமல் தானே கற்று தேர்ந்தார்.
1952ல் சாந்தா என்றவரை மணந்த இவருக்கு ராமன் என்ற மகன் உள்ளார்.
இவர் இசையில் வந்த திரைப்படங்கள்
--------------------------------------------
இது நிஜமா (1948)
என் கணவர் (1948)
கைதி (1951)
அவனா இவன் (1962)
பொம்மை (1964) (தத்தி தத்தி நடந்து வரும் தங்கபாப்பா, நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல்கள் சிறப்பு. ஜேசுதாஸ் இப்படத்தில்தான் "நீயும் பொம்மை" பாடல் மூலம் திரைப்பட பாடகராய் அறிமுகம் ஆனார்)
நடு இரவில்(1965)
1951ல் ராஜாம்பாள் என்ற படத்திற்கு எம் எஸ் ஞானமணியுன் இணைந்து இசையமைத்துள்ளார்.
இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ள் இவர் இயக்கத்தில் 10 படங்களுக்கு மேல் வந்துள்ளன.
1990ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிலாய் நகரில் ஒரு கச்சேரி செய்யப் போனப்போது அமரர் ஆனார்
No comments:
Post a Comment